அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய சிறப்பான ஜும்மா நாளின் அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் !
யா அல்லாஹ் !உன்னை திக்ரு செய்யவும் ,உனக்கு நன்றி செலுத்தவும் உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக!
யா ஷாஃபி! குணப்படுத்துபவனே எங்களில் யாராரெல்லாம் உள நோயாளும் உடல் நோயாளும் பாதிக்கப்பட்டுள்ளனரோ அவர்களை குணப்படுத்துவாயாக!
யா ஹாதி! நேர்வழி காட்டுபவனே !எங்களில் யாராரெல்லாம் நன்கு உடல் நலம் பெற்றிருந்தும் உன்னை வணங்காமல்,உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நேர் வழி காட்டுவாயாக!
யா ஹக்கீம்! மதி நுட்பம் மிக்கவனே! எங்களில் யாராரெல்லாம் மார்க்க அறிவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களை விசால மாக்கி அவர்களுக்கு மார்க்க அறிவை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பாயாக!
யா அலீம்! எல்லாம் அறிந்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் மார்க்க அறிவை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் கற்றதின்படி அமல் செய்பவர்களாகவும் பிறருக்கு கற்று கொடுத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தவ்பீக் செய்து அருள் புரிவாயாக!
எங்களை படைத்தவனே! எங்களில் யார் யாரெல்லாம் திருமண வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துத் தருவாயாக!
ரப்பே! யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் செல்வத்தை அருள்வாயாக!
யா லதீஃப்! எங்களில் யார் யாருக்கெல்லாம் மக்கள் செல்வத்தை அளித்திருக்கிராயோ அக்குழந்தைகள் ஸாலிஹானவர்களாகவும் இம்மை மறுமைக்கான கல்வி ஞானத்தை பெற்றவர்களாகவும் நல்ல அமல்களுடன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வதுடன் நாங்கள் வாழும் காலத்தில் தங்களின் செயல்களால் எங்களின் மனதை குளிர வைப்பவர்களாகவும் எங்களின் மரணத்திற்கு பின் எங்களுக்காக துஆ செய்பவர்களாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!
யா ரஹ்மான் !எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழவும் அவர்களின் துஆவை பெரும் வண்ணம் அவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்யவும் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக
கருணையாளனே! எங்களில் யார்யாருடைய பெற்றோர்கள் மறைந்து விட்டார்களோ அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்ப்பாயாக!நாங்கள் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் துஆ செய்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!
யா அஜீஸ்! கண்ணியமிக்கவனே! முஸ்லிம் சமுதாயத்திற்கு கண்ணியமளிப்பாயாக! எங்களின் சமுதாய தலைவர்கள் தங்களின் ஈகோ வை விட்டு உன்னுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து செயல் படுபவர்களாக ஆக்குவாயாக !
என்றும் நிலைத்து நிற்பவனே !நாங்கள் நல்ல அமல்களுடன் ,தீமைகளுக்கு எதிராக போராடுகிறா வர்களாக, உனக்கும் உன்னுடைய நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆணைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு வாழ அருள் புரிவாயாக
சல்லல்லாஹு அலா முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்
Sunday, 26 February 2017
ஜும்மா துஆ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment