اللَّهُمَّ إنِّي أسْألُكَ عِيشَةً نَقِيَّةً، ومِيتَةً سَوِيَّةً، ومَرَدّاً غَيْرَ مَخْزٍ ولا فاضِحٍ
: اللهم ! إني ضعيف ، فقو في رضاك ضعفي ، وخذ إلى الخير بناصيتي ، واجعل الإسلام منتهى رضائي . اللهم ! إني ضعيف فقوني ، وإني ذليل فأعزني ، وإني فقير فارزقني
யா அல்லாஹ்! நான் உன்னிடம் பரிசுத்தமானவாழ்க்கையையும், செவ்வையான நல்ல மரணத்தையும், இழிவும்கேவலமும் ஏற்படாமல் உன் பால் திரும்புவதையும் கேட்கிறேன்.
அல்லாஹ்வே! நான் மிகவும் பலவீனமானவன். நீ திருப்தி கொள்பவைகளில் எனது பலவீனத்தை சக்தியாக மாற்றிவிடுவாயாக!
எனது முன்நெற்றி ரோமத்தை பிடித்து நன்மையின்பால் என்னை இழுத்துவிடுவாயாக!
எனது திருப்தியின் எல்லையாக இஸ்லாத்தை ஆக்கிவிடுவாயாக!
நிச்சயமாக நான் இழிவானவன்.எனக்கு கண்ணியத்தைக்கொடு.
நான் தேவையானவன். எனக்கு இரணத்தைக் கொடுப்பாயாக!
اللَّهُمَّ احْفَظنِي بالإِسْلاَمِ قائِماً، واحْفَظْنِي بالإِسْلاَمِ قاعِداً، واحْفَظنِي بالإِسْلاَمِ راقِداً، ولا تُشْمِتْ بِي عَدُوّاً ولا حاسِداً. اللَّهُمَّ إِنِّي أسْألُكَ مِنْ كُلِّ خَيْر خزائِنُهُ بِيَدِكَ، وأعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرَ خَزَائِنُهُ بِيَدِكَ))
யா அல்லாஹ்! நான் நிற்கும்போதும் இஸ்லாமின் மீலம் என்னைக்காப்பாயாக!
நான் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாத்தைக் கொண்டு என்னைக் காப்பாயாக!
உறங்கும் போதும் இஸ்லாமின் மூலம் என்னைக் காப்பாயாக!
என் விரோதிகளும், என் மீது பொறாமை கொண்டோரும் என்மீது குற்றம் குறை கூற வாய்ப்பளிக்காதிருப்பாயாக!
அல்லாஹ்வே! உனது கைவசமிருக்கும் கருவூலங்களலிருந்து நல்லவை ஒவ்வொன்றையும் நான் கேட்கிறேன்.
உனது பிடியுள்ள நன்மைகள் அனைத்தையும் நான் வேண்டுகிறேன்.
ஆமீன்.